மாற்றுத்திறனாளி இளைஞருக்கு கடை வைத்துக் கொடுத்து உதவிய சமூக சேவகர் பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தலச்சங்காடு கிராமம் பண்டாரவடை பகுதியை சேர்ந்தவர் 24 வயது உடைய மாற்றுத்திறனாளியான மாதவன் இவரின் தாய் ராஜேஸ்வரி இவரும் மாற்றுத்திறனாளி இவரது தந்தை ரங்கநாதன் கூலி வேலை செய்பவர் இந்நிலையில் கடுமையான ஏழ்மை நிலையில் வாடி வந்த மாற்றுத்திறனாளியான தான் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது எனவும் தந்தை தாய்க்கு கூட தன்னால் பயனில்லையே எனவும் தனக்கும் யாரும் உதவ முன் வரவில்லையே என வேதனை அடைந்த நிலையில் வாழ்வதா சாவதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் தன் நிலை குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக மாதவன் தெரிவிக்க அதனை அறிந்த பொன்செய் கிராமத்தை சேர்ந்த சமூக சேவகர் கே பி ராஜ் என்பவர் தனது மக்கள் சேவை அறக்கட்டளை மூலம் பலரது உதவியை நாடி அவர்கள் மூலம் மாற்றுத்திறனாளியான மாதவனுக்கு உதவ முன் வந்தார் வாழ்வாதாரம் ஈட்டுவதற்கு பயனுள்ள வகையில் மாதவனுக்கு அவரது வீட்டு வாசலில் சிறிய கடை அமைத்து கொடுத்து தேவையான மளிகை பொருட்கள் அனைத்தையும் வழங்கி கொடுத்து கடை திறப்பு விழாவும் நடைபெற்றது
மாதவனுக்கு உதவிய சமூக சேவகர் கே பி ராஜ் இவரும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தன் ஏழ்மை நிலையிலும் சாலை ஓரம் உள்ள பலருக்கு உணவு வழங்குவது மனநலம் பாதிக்கப்பட்டவரை முடி திருத்தம் செய்வது ஏழை மாணவர்களுக்கு உதவுவது என பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார் இந்நிலையில்தான் மாதவனுக்கு உதவ முன்வந்து கடை அமைத்து கொடுத்துள்ளார் கடை திறப்பு விழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் பல இளைஞர்களும் ஆர்வத்துடன் முன்வந்து பங்கேற்று தங்களது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தெரிவித்தனர் சமூக சேவருக்கு பாராட்டும் தெரிவித்தனர் இந்த நிலையில் மாற்றுத்திறனாளி மாதவன் சமூக சேவகர் கே.பி. ராஜை கட்டி அணைத்து தனக்கு யாரும் உதவ முன் வராத நிலையில் என் வாழ்க்கையை வாழ்வதற்கு தங்கள் உதவியை மறக்க மாட்டேன் வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு கடமை பட்டு உள்ளேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார் இந்த தருணம் அனைவரையும் கண்கலங்க வைத்தது பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை கடையில் பணம் கொடுத்து வாங்கி சென்றனர் தான் செய்த முதல் வியாபாரத்தின் பணத்தை கல்லாப்பெட்டியில் சுற்றி தனக்கு வாழ்வாதாரம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் ஆனந்தம் அடைந்தார் மாதவன்.