in

உயர்கல்வி மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழில் ஆய்வுகள் நடத்த உரிய நடவடிக்கை

உயர்கல்வி மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழில் ஆய்வுகள் நடத்த உரிய நடவடிக்கை

 

உயர்கல்வி மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழில் ஆய்வுகள் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளில் 2 கோடியே 23லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்து பேட்டி.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியத்தில் சிதம்பரநாதபுரம் ஊராட்சியில் 16 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம், காவனூர் ஊராட்சியில் பள்ளி வகுப்பரை கட்டிடம், சரபோஜிராஜபுரம் ஊராட்சி வேட்டமங்கலத்தில் 42.65 லட்சம் மதிப்பீட்டில் கிராமச் செயலக கட்டிடம், மரத்துறை, திருமங்கைச்சேரி,செருகுடி ஆகிய ஊராட்சிகளில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், நெய் குப்பை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம், ஆரலூரில் சமுதாயக் கூடம், திருலோகி ஊராட்சியில் பொது விநியோகத்திட்ட அங்காடி கட்டிடம் உள்ளிட்ட 2 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டிலான 9 புதிய கட்டிடங்களையும், தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் திறந்து வைத்தார். மேலும் வேட்டமங்கலத்திலிருந்து அணைக்கரை திருப்பனந்தாள் வழியாக கும்பகோணத்திற்கு தடம் எண் 34ஏ பேருந்து சேவை இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் உயர்கல்வி துறையை தன் துறையைப் போன்று முதலமைச்சர் எண்ணுவதால் நிச்சயமாக சாதித்து காட்டக் கடிய துறையாக இது இருக்கும் எனவும் உயர்கல்வி மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழில் ஆய்வுகள் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், டெல்டா மாவட்டத்தில் உயர்கல்வித்துறைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது அந்த வகையில் அரசு கல்லூரிக்கு மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 10 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிவறை வசதி கட்டிடப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வழிகாட்டுதலோடு மக்களுக்கான அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட திட்ட இயக்குநர், திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்கியராஜ், திருப்பனந்தாள் ஒன்றிய பெருந்தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணை பெருந்தலைவர் கோ.க.அண்ணாதுரை ஒன்றிய செயலாளர்கள் மிசா.மனோகரன், உதயா ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

மியான்மர்( பர்மா) நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் பாய்மர படகுடன் கைது

20 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது