விவாகரத்து குறித்து வீடியோ வெளியிட்ட ஏ. ஆர். ரகுமான் மனைவி
ஏ. ஆர். ரகுமானை நான் ஏன் விவாகரத்து செய்தேன் என்பதை குறித்து முதன்முறையாக சாரா பானு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
இவர்களின் பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரவி வரும் நிலையில் ஏ ஆர் ரகுமானின் வக்கீல் நர்மதா சம்பந்தப்பட்ட வலைத்தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
சாய்ரா வெளியிட்ட வீடியோவில் நான் சாய்ரா பேசுகிறேன், நான் தற்பொழுது மும்பையில் இருக்கிறேன் எனக்கு இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லை அதனால் ஏ ஆர் ரகுமான் இடம் இருந்து நான் விலகி இருக்க விரும்புகிறேன்.
Youtube சேனல்களும் ஊடகங்களும் அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம், அவர் அருமையான நபர், சிறந்த மனிதர் எனது உடல்நிலை பிரச்சினை காரணமாக நான் சென்னையை விட்டு சிகிச்சைக்காக சென்று இருக்கிறேன். நான் அவரையோ குழந்தைகளையோ தொந்தரவு செய்ய விரும்பவில்லை அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரை விட்டு விடுங்கள் என்று நான் வேண்டிக் கொள்கிறேன், நான் அவரை என் உயிருக்கு மேலாக நேசிக்கிறேன் அவரும் அவ்வாறே நேசிக்கிறார்.
எனவே அவர் மீதான பொய் குற்றச்சாட்டுகளை நிறுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் எங்கள் தனிமைக்கு இடம் கொடுங்கள் இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
என் சிகிச்சைமுடிந்ததும் நான் விரைவில் சென்னைக்கு வருவேன். ஏ ஆர் ரகுமானை தரகுறைவாக தயவு செய்து பேச வேண்டாம் என்று சாய்ரா கூறியுள்ளார்.
ஏற்கனவே ஏ ஆர் ரகுமானின் நண்பரும் ஏ ஆர் ரகுமானுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு வரும் அது போல தான் இதுவும் சாய்ரா மேடம் மனம் மாறி விரைவிலேயே ஏ ஆர் ரகுமான் உடன் சேர்ந்து விடுவார் என்று கூறியிருக்கிறார்.