ஏஆர் ரகுமான்… அவதூறு கருத்துகளை சமூக வலைத்தளங்கலில்.. நீக்க வேண்டும் மீறினால்… கிரிமினல் நடவடிக்கை
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை அவரது மனைவி சாரா பானு விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், ஏஆர் ரகுமான் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கு கடும் கண்டனம் அவரது மகன் தெரிவித்தார். ஏ ஆர் ரகுமானும் மோகினி டே ..வும் ஒன்றாக விவாகரத்து அறிவித்தால் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக வதந்திகள் இணையதளத்தில் பரவியது தன்னை பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறு கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அவரது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் A.R..
அவரது வக்கீல் நர்மதா வெளியிட்டுள்ள நோட்டீஸில் ஏ ஆர் ரகுமானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளங்கல், Youtube களில் தவறான கருத்துக்கள் நிலவி வருகிறது.
இவை ஏ ஆர் ரகுமானின் நற்பெயருக்கு கலங்கத்தையும் அவரது குடும்பத்தையும் புண்படுத்துகிறது. எனவே அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஏ ஆர் ரகுமான் குறித்த சர்ச்சை பதவிகளை சமூக வலைத்தளங்களில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் அகற்றி விட வேண்டும் மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் அவரைப் பற்றி தவறான கருத்துக்கள் எழுதும் ஒவ்வொருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
எனவே Youtube, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என எல்லா சமூக வலைத்தளங்கலில் இருந்தும் அவரைப் பற்றிய தவறான கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.