in

யூடியூப்பில் புதிய சாதனை படைத்த ‘அரபிக் குத்து’ பாடல்

யூடியூப்பில் புதிய சாதனை படைத்த ‘அரபிக் குத்து’ பாடல்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளியான படம் பீஸ்ட். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தப் படம் திரையரங்குகளில் ஏமாற்றமடைந்தாலும், பாடல்கள் அனைவரையும் கவர்ந்தன. குறிப்பாக ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.

இதுவரை ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூபில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, தென்னிந்தியாவில் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்ற மிக விரைவான பாடல் என்ற சாதனையை அரபிக் குத்து பெற்றிருகிறது இது 15 நாட்களில் இந்த சாதனையை எட்டியது. தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் ‘ரவுடி பேபி’ பாடலின் சாதனையை அரபிக் குத்து முறியடித்தது. ரவுடி பேபி 18 நாட்களில் 100 மில்லியனைத் தாண்டியது. விஜய்யின் மாஸ்டரில் வெளியான ‘வாத்தி கம்மிங்’ பாடல் மூன்றாவது இடத்தில் உள்ளது.

What do you think?

யாருக்கு வேண்டும் அவர்கள் ஆஸ்கார் விருது

‘புஷ்பா 3: தி ரேம்பேஜ்’ 2028 வெளியாகும்