in

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரை வென்றான் பானை ஓடுகள் கிடந்த இடத்தில் தொல்லியல் துறை ஆய்வு…

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரை வென்றான் பானை ஓடுகள் கிடந்த இடத்தில் தொல்லியல் துறை ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் அடிவாரத்தில் குளம் தோண்டிய போது பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். மலையடிவாரத்தில் அகழாய்வு நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு அருகே மூவரைவென்றான் பகுதியில் உள்ள மலையில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த மலைக் கொழுந்தீஸ்வர் கோயில் உள்ளது. குடைவரை முறையில் கட்டப்பட்ட இக்கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் மூவரை வென்றான் ஊராட்சி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் குளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று குளம் வெட்டும் பணி நடந்த போது, 2 அடி ஆழத்தில் மண் பானை ஓடுகள் மற்றும் எலும்புகள் தென்பட்டது. இதுகுறித்து மலை கொழுந்தீஸ்வரர் கோயில் தொல்லியல் சின்ன பாதுகாப்பாளர் ராம் விக்னேஷ் தொல்லியல் துறைக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் விருதுநகர் மாவட்ட தொல்லியல் அலுவலர் சண்முகவள்ளி, தொல்லியல்துறை காப்பாட்சியர் பால்துறை, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்து, இங்கு கிடைத்த பொருட்கள் ஆய்வு செய்யப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். குளம் தோண்டும் போது கிடைத்த மண் குடுவை, மண் பானை இரும்பு தாதுக்கள் உள்ளிட்ட பொருட்களை வருவாய்த்துறையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

What do you think?

திமுக சார்பில் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளது.