in

ஒலிபெருக்கி உரிமையாளருக்கும், சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம்


Watch – YouTube Click

பட்டிவீரன்பட்டி அருகே, சித்தரேவு கிராமத்தில், உயர்மின் கோபுர விளக்கில், கூம்பு வடிவ குழாய் கட்டிய ஒலிபெருக்கி உரிமையாளருக்கும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே (9.6.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வாக்குவாததில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மது போதையில் இருந்ததாக கூறும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே, சித்தரேவு கிராமத்தில் தனியார் ஒருவரது இல்ல புதுமனை புகு விழாவிற்கு, இக்கிராமத்தைச் சேர்ந்த ஒலிபெருக்கி உரிமையாளர் ஆண்டிச்சாமி (46) என்பவர், கூம்பு வடிவ குழாயை பயன்படுத்தி, ஒலிபெருக்கி அமைத்துள்ளார்.

இந்நிலையில், அவர், கூம்பு வடிவ குழாயை உயர் மின் கோபுர விளக்கில் கட்டி உள்ளார். அந்தப் பகுதியில் ரோந்து பணிக்குச்சென்ற பட்டிவீரன்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தவமணி என்பவர் சம்பந்தப்பட்ட ஒலிபெருக்கி உரிமையாளர் ஆண்டிச்சாமியிடம் உயர்மின் கோபுர விளக்கில் கூம்பு வடிவ குழாய் கட்டக்கூடாது என கூறியுள்ளார். அப்போது, ஒலிபெருக்கி உரிமையாளருக்கும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் தகவல் அறிந்த, பட்டிவீரன்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராம்சேட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, ஒலிபெருக்கி உரிமையாளர் ஆண்டிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயர் மின் கோபுரத்தில் கட்டியிருந்த கூம்பு வடிவ குழாயை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஒலிபெருக்கி உரிமையாளரும், காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மது போதையில் இருப்பதாக ஒலிபெருக்கி உரிமையாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

எத்தனை முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை சட்டமன்ற உறுப்பினரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் புகார்

மின்துறை அலுவலகத்திற்கு ஊழியர்கள் வராததால் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்து பணி செய்து எதிர்ப்பு