in

திமுக சேர்மன் கட்சியினருடன் வாக்கு சேகரிக்க சென்ற போது வாக்குவாதம்


Watch – YouTube Click

திமுக சேர்மன் கட்சியினருடன் வாக்கு சேகரிக்க சென்ற போது வாக்குவாதம்

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்குட்பட்டது 33 வார்டுகள் உள்ளது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் அவருடைய 23 வது வார்டில் இன்று மாலை வாக்கு சேகரிக்க சென்றபோது பெரிய பள்ளிவாசல் பகுதி அசாஸ் இராவுத்தர் சந்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது, அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் பலரது வாக்குகள் நீக்கப்பட்டது குறித்து அப்பகுதி பெண்கள் கேள்வி எழுப்பியதால் கடும் வாக்குவாதம்‌.

வாக்குவாதம் முற்றியதில் அப்பகுதி பெண்களை உமாமகேஸ்வரி மற்றும் அவருடன் வந்த சிலரும் மிகவும் அநாகரிகமாகவும், தரக்குறைவான வார்த்தையிலும் திட்டி சென்றதாக அப்பகுதி பெண்கள் குற்றச்சாட்டு.

எனவே நகர்மன்றத்தலைவர் உமா மகேஷ்வரி மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறி திமுக நகர மன்ற தலைவர் உமாமகேஸ்வரி வீட்டை இஸ்லாமிய பெண்கள் பலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது நகரமன்ற தலைவர் உமா மகேஸ்வரி மகள் இஸ்லாமிய பெண்ணை தாக்கியதால் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

தேர்தல் பத்திரத்துடன் தேர்தலை சந்திப்பவர்கள் தோற்பார்கள் திருச்சியில் கி வீரமணி பேட்டி

குதிரையில் சென்று வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்