in

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் அறிவுமணி 

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் அறிவுமணி 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் VJ சித்ரா நடித்தார். அவரின் மறைவுக்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் அறிவுமணி நடித்தார்.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சினிமா வாய்ப்பை பெற்றார்.

மிரல், ரிப்பப்பரி போன்ற படங்களில் நடித்தார். தற்பொழுது கவின் நயன்தாரா நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படம் குறித்து அறிவு மணி கூறியதாவது நயன்தாரா படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை அவரின் படத்தில் நடிப்பதை நான் ஆசீர்வாதமாக நினைக்கிறேன்.

படப்பிடிப்பிற்கு வந்தவுடன் தனது வேலையை பார்ப்பார் எந்த விஷயத்திலும் தலையிட மாட்டார் நான் பள்ளி நாட்களில் மோனோ ஆக்டிங் செய்யும் போது எனது நண்பர்கள் நீ ஏன் சினிமாவிற்கு முயற்சி செய்யக் கூடாது என்று கூறினார்கள்.

சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் சென்னைக்கு தனியாக வந்தேன் பலரிடம் வாய்ப்பு கேட்டேன் இறுதியாக யூடியூபில் குறும்பு படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன்.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சினிமா வாய்ப்புக்கான தேடலில் ஈடுபட்டேன். ஆனால் தேதி பிரச்சனை காரணமாக பலப்பட வாய்ப்புகளை நழுவ விட்டேன்.

இப்பொழுது ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் பெட்டிக்குள் இருப்பது போல் ஆகிவிடும் எனவே தைரியமாக ரிஸ்க் எடுத்து சீரியலில் இருந்து வெளியேறினேன்.

திடீரென்று திரைப்படங்களில் நடிப்பது என்பது போராட்டமான விஷயம் நம்மை நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கு பணம் தேவை சீரியலில் நடிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து வைத்தேன் அதன் மூலம் என்னை நானே வளர்த்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

What do you think?

கனா காணும் காலங்கள் நடிகர் பிளாக் பாண்டி

விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியின் பிரபலம் காலமானார்