திருக்கடையூரில் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அவருக்கு 60 வயது ஒட்டி அவருக்கும் அவர் மனைவி சுப்புரத்தினம் இருவருக்கும் சஷ்டியப்த பூர்த்தி மணவிழா நடைபெற்றது.
இதில் அவர் மகன்கள் உறவினர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் இதில் அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது கட்சி நடவடிக்கை போதாது எனவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் மத்தியில் சுயாட்சி மாநிலத்தில் கூட்டாட்சி என்ற தத்துவத்தை அப்போது டாக்டர் அம்பேத்கர் எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.
வக்ப்பு சட்டத்தை இஸ்லாமியர்களே ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமிழகத்தில் திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் எதிர்ப்பது திசை திருப்பும் போக்கு எனவும் இதனால் கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார். நிர்வாகிகள் உடன் இருந்தனர்.