மயிலாடுதுறை அருகே குளிச்சாரு கிராமத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாராத காரணத்தால் நேற்று பெய்த மழையில் சுமார் 100 ஏக்கர் சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கியது விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 7 தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. நேற்று மயிலாடுதுறை மாவட்டம் மொத்தம் 69 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிற் சாகுபடி செய்துள்ளனர் அதில் 1120 ஹெக்டேர் மழை நீரில் மூழ்கியுள்ளது மாவட்டம் முழுவதும் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் பிற்பகல் 6 துவங்கிய மழை இன்றும் தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது இதனை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மயிலாடுதுறை அருகே குளிச்சாரு கிராமத்தில் வடிகால் வாய்க்கால், வயல்களில் தேங்கும் உபரி நீரை மஞ்சள் ஆற்றில் சென்று சேர்க்கும் முக்கிய வடிகாலாக உள்ளது. இதன் தலைப்பு பகுதி தூர்வாராத காரணத்தால் குளிச்சாரு அரங்கக்குடி வடகரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கினால் பயிர்கள் அழுகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். வடிகால் வாய்க்காலை தூர் வாருவதுடன் பாதிக்கப்பட்ட சம்பா பயிருக்கு கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேளாண்மை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்