in

திருச்செந்தூர் கடற்கரையில் அருகில் 800 பரதநாட்டிய கலைஞர்கள் நாட்டியமாடி உலக சாதனை படைத்தனர்


Watch – YouTube Click

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அருகில் 800 பரதநாட்டிய கலைஞர்கள் நாட்டியமாடி உலக சாதனை படைத்தனர்.

திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் உலக சாதனைக்காக 800 மாணவிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் வைத்து நடைபெற்றது. இதில் செந்தூர் அலை ஓசையில் கலை அர்ப்பணம்” என்ற பெயரில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் 5 வயது முதல் 20 வயது வரையிலான மாணவிகள் முருகர் வேடமணிந்து கைகளில் வேல் ஏந்தியும், காவடியை சுமந்தும் 17 நிமிடத்தில் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர்.

தொடர்ந்து மாணவிகளுக்கு ஏசியா பசுபிக் ரெக்கார்ட்ஸ் மற்றும் ரெக்கார்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தினர் சாதனைக்கான சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் விருதினை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி சிவசக்தி அகாடமி நிறுவனர், நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

பத்திரிக்கை சுதந்திரம் என்பது அனைத்துமே திமுகவிற்கு விலை போய் விட்டது எம் ஆர் விஜயபாஸ்கர் பேச்சு

நிலக்கோட்டை அருகே கலையரங்க மராமத்து நிதியில் முறைகேடு மூன்றே மாதத்தில் பெயர்ந்து விழுந்த டைல்ஸ்கள்