in

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட 2 நபர்களை கைது


Watch – YouTube Click

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட 2 நபர்களை கைது

 

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இணையதளத்தில் போலியான நிறுவனத்தின் பெயரில் பண மோசடியில் ஈடுபட்ட 2 நபர்களை கைது‌ .

நெல்லை மாவட்டம், வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த நபர் அவருடைய மகனுக்கு வெளிநாட்டில் வேலைக்காக இணையதளத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தகவல்களை பதிவு செய்து வைத்துள்ளார்.

பின் இணையதளத்தில் ஒரு தனியார் நிறுவனம் மூலம் அவருடைய மகனுக்கு வெளிநாட்டில் வேலை தருவதாகவும், அதற்கு VISA பெறுவதற்கும், வேலைக்காகவும் குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.

வள்ளியூரை சேர்ந்த நபர் அந்நிறுவனத்திலுள்ளவருக்கு பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 45,51,240 பணத்தை அனுப்பியதாகவும், பின் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், இவ்வழக்கில் உள்ள எதிரிகள் கர்நாடகாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கர்நாடகாவில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு, பெங்களூர், சுகாட்டா, வெங்கட் ரெட்டி பில்டிங் முன்பு வைத்து நைஜீரியா நாட்டை சேர்ந்த அலுக்கோ ஒலுவா டோபி ஜோன்ஸ் (51), கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா, ஹலியல், சதாசிவ்நகரை சேர்ந்த பவன் கல்லப்பா மால்வி(33) என்பவரை அப்பகுதியில் வைத்தும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

ரம்ஜான் நோன்பின் போது விமான பயண தடை

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்