in

பிஜேபி அரசின் அடக்குமுறைகளை வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களை கைது


Watch – YouTube Click

பிஜேபி அரசின் அடக்குமுறைகளை வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களை கைது

 

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார் .

இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி ஆனது நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர் . மேலும் நடைபெற்ற நிகழ்வில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் மக்கள் 100 சதவீத வாக்குகள் அளிக்க வேண்டும் எனவும், பாஜக அரசின் ஆட்சியில் மதவாத அரசியலையும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர் .

தொடர்ந்து பேசிய நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான ரோகிணி திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பேசினார். மகளிர் உரிமை தொகை மற்றும் இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பிஜேபி ஆளுகின்ற குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி 27% மட்டுமே இருப்பதாகவும், பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு அவர்களுக்கு என சில வரைமுறைகள் வைத்து இருப்பதாகவும் கோவிலின் கருவறைக்குள் வரக்கூடாது எனவும் கோவிலை தாங்கள் திறப்போம் ஆனால் அதற்கு அழைப்பு தர மாட்டோம் எனவும் பிஜேபி கூறுவதாகவும், பாரத ரத்னா விருது அத்வானிக்கு கொடுத்த பொழுது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதனால் குடியரசு தலைவருக்கு முறையான மரியாதை மோடி கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார் .

மல்யுத்த வீரர்களுக்கு எதிரான பாலியல் சீண்டலின் போது நடந்த போராட்டத்திற்கு கூட மோடி செவி சாய்க்கவில்லை எனவும், பிஜேபி அரசு செய்கின்ற அடக்குமுறைகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிக்கையாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாகவும் , பிரபல மருந்து நிறுவனங்கள் மீது புகார் எழுந்த நிலையில் தரச்சான்று வழங்க முடியாத நிலை இருந்த சூழலில் பிஜேபி அரசுக்காக பல கோடி ரூபாய் அந்த நிறுவனம் வாங்கியதன் பெயரில் அந்த நிறுவனத்திற்கு தரச்சான்று உடனடியாக வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

எனவே அடக்குமுறைகளை எதிர்த்து இந்தியா கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் திண்டுக்கல் மாவட்டத்தில் அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

மிசாகாலத்தில் கூட தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டது தற்போது பல தில்லுமுல்லுகள்

கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட நீராகரங்கள் அருந்தியதால் வாந்தி மயக்கம்