பண மோசடி மோசடி வழக்கில் சோனு சூட் …டுக்கு கைது வாரண்ட்
பண மோசடி மோசடி வழக்கு தொடர்பாக லூதியானாவில் உள்ள நீதிமன்றம் நடிகருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து, சோனு சூட் விளக்கம் அளித்துள்ளார்.
முக்கியக் குற்றவாளியாக மோஹித் சுக்லா, மற்றும் ரிஜிகா காயின்லா ஆகியோர் தங்கள் முதலீடு திட்டத்’தில், பணம் போட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்டதாகவும்.
இந்த திட்டத்தின் விளம்ப தூதர் சோனு சூட் என்று கூறியுள்ளனர். மோசடி வழக்கு தொடர்பாக தனக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுவதாக சமீபத்தில் வெளியான செய்திகளுக்கு நடிகர் சோனு சூட் பதிலளித்துள்ளார்.
இந்த விஷயம் சமூக ஊடகங்களில் மிகைப்படுத்தப்படுவதாக நடிகர் குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் இந்த வழக்கில் சாட்சியமளிக்க சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் நடிகர் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் விளைவாக, மாஜிஸ்திரேட் கைது வாரண்ட் பிறப்பித்தார்.