in

வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயலகத்தில் வாழும் தமிழர்கள் வருகை

 வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயலகத்தில் வாழும் தமிழர்கள் வருகை

 

நெல்லை மாவட்டத்திற்கு வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயலகத்தில் வாழும் தமிழர்கள் வருகை தந்தனர். நெல்லை வந்த அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க நெல்லையப்பர் கோவிலை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயலகத் தமிழர்களின் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக “வேர்களைத்தேடி” என்றொரு பண்பாட்டுப்பயணத் திட்டத்தினை அறிவித்து. 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்து செல்ல உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக கடந்த 03.01.2024 அன்று இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை ஆகிய 4 நாடுகளை சேர்ந்த 57 இளைஞர்கள் தேர்வாகி சென்னை, தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொண்டார்கள். இதன் இரண்டாம் கட்டபயணமாக, இன்று தென்ஆப்ரிக்கா, உகாண்டா, பிஜீ , இந்தோனேஷியா மொரிஷியஸ் ஆஸ்திரேலியா, மாலத்தீவு கனடா, பிரான்ஸ் உள்பட 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத்தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் நெல்லை வந்தனர்.

இங்கு டவுணில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர். அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலுள்ள சிற்பங்கள், இசைத் தூண்கள். சிலைகள் உள்ளிட்டவைகளை சுற்றி பார்த்து, இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம். ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். தாமிரசபை மரச்சிற்பங்களை நுட்பமான வடிவமைப்பினைக் கண்டு வியந்தனர். தொடர்ந்து, தென்காசி. மதுரை, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய, இடங்களுக்கு பயணித்து சென்னைக்கு வரும் 14.08.2024 அன்று சென்றடைகின்றனர்.

முன்னதாக நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த அயலகத்தில் வாழும் தமிழர்களை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் ராஜு, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா ஆகியோர் வரவேற்றார்கள்.

What do you think?

புதுச்சேரி மெரினா கடற்கரையில் ஓட்டகம்- குதிரைகளை பயன்படுத்த தடை

நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக ராமகிருஷ்ணன் பதவியேற்பு