கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ,எம்.எல்.ஏ அம்பேத்குமார் பங்கேற்றனர்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் நகர திமுக செயலாளர் எ.தயாளன் தலைமையில் நடைபெற்றது.நகர அவைத் தலைவர் நவாப் ஜான் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ,மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், பேரறிஞர் அண்ணா சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே நகரமன்ற தலைவர் எச்.ஜலால் முன்னிலையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வந்தவாசி சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான எஸ் அம்பேத்குமார், திமுக கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து,நகர திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி படத்திற்கு நகர செயலாளர் எ.தயாளன் உள்ளிட்ட திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து வந்தவாசி நகரின் 24 வார்டுகளிலும், நகர திமுக செயலாளர் எ.தயாளன் ஏற்பாட்டில் கலைஞரின் படத்திற்கு கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
இந்த நிகழ்ச்சிகளில், ஒன்றிய செயலாளர் வந்தவாசி சி.ஆர். பெருமாள், மாவட்ட பிரதிநிதிகள் குடியரசு, அன்சாரி, ராஜாபாஷா நகர் மன்ற உறுப்பினர்கள் கே.நாகூர்மீரான், அன்பரசு, மகேந்திரன், நூர் முகம்மது, சையத் அப்துல் கறீம், மணிகண்டன்,சித்திக் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரும், நகரமன்ற உறுப்பினருமான கிஷோர் குமார்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மதன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் டி.கே.அருள், மாவட்ட தொண்டர் அணி ரஜினி, மாவட்ட வியாபாரிகள் அணி பிடிஜி ஆறுமுகம், மாவட்ட பொறியாளர் அணி யுவராஜ், மாவட்ட சிறுபான்மை அணி அப்துல் ரசூல்,முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாரி,ரமேஷ், ,பொதுக்குழு உறுப்பினர் அப்சர்லியாகத்பாஷா, ,சையத் அப்துல் கரீம், அயலக அணி ஆரிப், கிளைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது,சர்தார், தலதளபதி மஞ்சு , லிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.