in ,

அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பா் திருக்கோயில் பவித்ரோஸ்தவம்

அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பா் திருக்கோயில் பவித்ரோஸ்தவம்

 

அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பா் திருக்கோயிலில் பவித்ரோஸ்தவம் இன்று சிறப்பாக நடைபெற்றது. ஏராளமானோா் சுவாமி தாிசனம்.

நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் பவித்ர உற்சவ திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. உலக மக்கள் இகபர சௌபாக்கியங்கள் பெற்று நலமோடு வாழ ஆலயங்களில் திருவிழாக்கள் , பூஜைகள் நடைபெறுகின்றன.

இவ்வாறு நடைபெறும் பூஜைகளில் அறிந்தோ அறியாமலோ சிறு சிறு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இதை நிவா்த்தி செய்யும் பொருட்டு கோவில்களில் திருப்பவித்திர உற்ச்சவம் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் யாக குண்டங்கள் ஏற்படுத்தி கும்பத்திற்கு பவித்ர மாலை அணிவித்து பூா்ணாகுதி சமா்பிக்கப்படுகின்றது.

பின்னா் பவித்ர மாலையானது சுவாமி மற்றும் அம்பாளுக்கு சாற்றப்பட்டு கும்ப நீா் அபிஷேகம் செய்யப்படுகின்றது. இந் நிகழ்வே பவித்ர உற்சவம். அதன்படி இன்று காலை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு பருத்தி நூலினால் ஆன வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. கலசங்கள் வைத்து ஹோமங்கள் நடைபெற்றது.

உற்சவ மூா்த்திகள் விநாயகா், வள்ளி தெய்வானைசமேத முருகப்பெருமான், சுவாமி சந்திரசேரா், காந்திமதி அம்பாள் ஆகியோருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. பவித்ர மாலையானது மூலஸ்தானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விநாயகா், முருகன், சுவாமி நெல்லையப்பா், காந்திமதி அம்பாள் மற்றும் உற்சவ மூா்த்திகளுக்கு சாற்றப்பட்டது. தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றது. மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா கோமதி அம்பாள் திருத்தேரோட்டம்