in

அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அன்னவாகனத்தில் திருவீதி உலா

அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் 32 ஆண்டுகளுக்கு பிறகு அன்னவாகனத்தில் திருவீதி உலா கண்ட நெல்லை ஸ்ரீகாந்திமதிஅம்பாள். ஏராளமான பக்தா்கள் தாிசனம்.

தமிழகத்தில் நாயன்மாா்களால் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

அதன் ஒரு நிகழ்வாக அன்னை காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 15 நாட்கள் நடைபெறக்கூடிய திருவிழாவில் 6ம் திருநாளில் காந்திமதி அம்பாள் அன்ன வாகனத்தில் திருவீதி உலா வருவது வழக்கம் . அன்ன வாகனம் பழுது ஏற்பட்ட நிலையில் அன்ன வாகன வீதி உலா எழுந்திருமில்லாமல் இருந்தது.

கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ 12 லட்சம் மதிப்பிலான புதிய அன்ன வாகனம் 32 ஆண்டுகளுக்கு பிறகு செய்து முடிக்கப்பட்டு இன்று வீதி உலா நடைபெற்றது. இதற்காக மாலையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாள் முதலில் சுவாமி சன்னதி சென்று அங்கு சுவாமி நெல்லையப்பரிடம் திருப்பாவாடை பெறும் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடா்ந்து புதியதாக செய்யப்பட்ட அன்னவாகனத்தில் ஏழுந்தருளி சுவாமி நெல்லையப்பரிடம் பெற்ற திருப்பாவாடை அம்பாளுக்கு சாற்றப்பட்டு சா்வ ஆபரணங்கள் மலா் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்தாா். அன்ன வாகனத்தில் ஏழுந்தருளிய அன்னைக்கு மகா தீபாராதனையும் அmதனை தொடா்ந்து யாகசாலை தீபாராதனையும் நடைபெற்றது.

அதனை தொடா்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க காந்திமதி அம்பாள் தன் சன்னதியில் இருந்து வீதிஉலா ர்றப்பட கொவரை வாயில் தீபாராதனை நடைபெற்றது. திருக்கோயில் வெளியே அம்பாளுக்கு திருக்குடைகள் சாற்றப்பட்டு ரதவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் அன்னையின் அன்னவாகன வீதிஉலாவினை தாிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் அறங்காவலா்குழுவினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

What do you think?

கூடங்குளம் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகள் அங்கே சேகரித்து வைப்பதன் மூலம் எந்தவித பாதிப்பும் இல்லை