அருள்மிகு சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழை வெள்ளம்
சங்கரன்கோவிலில் பெய்த கனமழையின் காரணமாக அருள்மிகு சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழை வெள்ளம்- முழங்கால் அளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் அம்பாள் சப்பரத்தை சுமந்து சென்றதால் பக்தர்கள் அதிர்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர் இந்நிலையில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலிலும் மழை நீர் புகுந்ததால் சுவாமி சன்னதி முன்பும் அம்மன் சன்னதி முன்பும் சங்கரநாராயண சுவாமி சன்னதியிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது.
இதனால் கோவிலில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு Arulmiku Sankaranarayanar Swami temple was flooded like a pondஉள்ளாகினர் மேலும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருவதால் அம்மன் வீதி உலாவிற்காக குழம் போல் தேங்கிய மழை நீருக்கு நடுவே அலங்கரிக்கப்பட்ட அம்மன் சப்பரத்தை ஆபத்தான முறையில் தூக்கிச்சென்ற சம்பவம் அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் திருக்கோவில் முழுவதும் மழை நீர் தேங்கி இருந்ததால் தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் செல்பி எடுத்தும் குழந்தைகள் தண்ணீரில் ஓடி குதித்து விளையாடியும் மகிழ்ந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக இதே போன்று திருக்கோவில் முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கிய சம்பவம் செய்தியாக வெளியான பின்பும்கூட கனமழையின் போது திருக்கோவிலுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க திருக்கோவில் நிர்வாகம் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் மழை வெள்ளநீர் போகாமல் இருக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.