in ,

கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா கோமதி அம்பாள் திருத்தேரோட்டம்

கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா கோமதி அம்பாள் திருத்தேரோட்டம்

 

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநயினார்- கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழாவில் 9ம் நாள் கோமதிஅம்பாள் திருத்தேரோட்டம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து தேரை இழுத்தனர்

தென்தமிழகத்தில் அமைந்துள்ள சிவ தலங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. மதுரை ஆண்ட உக்கிரமபாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இதுவாகும். சைவ, வைணவ சமய பேதங்களைக் கடந்து, சமரசத்தை நிலைநாட்டும் ஸ்தலமாக சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் திகழ்கிறது. இங்கு சுவாமி அம்பாளுக்கு தனித்தனியா ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இதன்படி ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் கோமதி அம்பாள் தவத்தின் பயனாக சுவாமி திருக்காட்சி அளிக்கும் நிகழ்ச்சியானது ஆடித் தபசு திருவிழாவாக 12 நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கோமதி அம்மன் சன்னதி முன்பு கொடியேற்றத்துடன் கடந்த 11ம் தேதி தொடங்கியது . திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. 9 ம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் காலை 5.30 – 6.10 க்குள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரில் கோமதி அம்பாள் அரக்குபட்டு உடுத்தி முத்து மாலை நவரத்தின பதக்க ஓட்டியானம் பவளமாலையுடன் வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சிகொடுத்தாா். பின்னா் பஞ்ச வாத்தியங்கள் இசைக்க தேர் வடம் பிடித்து பக்தா்கள் இழுத்தனா்.. திருத்தோ் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தோ் வடம் பிடித்து இழுத்தனா். ஆடித் தபசின் சிகர நிகழ்வான அம்பாள் தபசுக்காட்சி வருகின்ற 21 ம் தேதி நடைபெறுகின்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரா்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பா் திருக்கோயில் பவித்ரோஸ்தவம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது