in

அருள்மிகு ஶ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா தீச்சட்டி எடுத்து செலுத்திய தரிசனம்

கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் தீச்சட்டி எடுத்து செலுத்திய தரிசனம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் CCTV கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கிராம கோவிலில் ஒன்றான அருள்மிகு ஶ்ரீ கௌமாரியம்மன் கோவிலின் 3 நாட்கள் நடைபெறும் ஆனிபெருந்திருவிழா துவங்கியது.

கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அழகு குத்தி தீச்சட்டி எடுத்தும், இரண்டு கையில் அக்கினி சட்டியை ஏந்தியும் , ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் பெரியகுளத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதற்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

What do you think?

2026ல் எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள், “Wait and see” என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு முதல் தேவி தியேட்டர் வரை திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.