in

அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழா சிகர நிகழ்ச்சியான மறுவீடு பட்டணப்பிரவேச விழா

அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மறுவீடு பட்டணப்பிரவேச விழா வெகு விமர்சையாக நடைபெற்றது அம்பாள் புகுந்த வீடு செல்லும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சீா்வாிசைகளுடன் கலந்து கொண்டு அம்மை அப்பனைன தரிசனம் செய்தனர்.

பழமையும் பெருமையும் வாய்ந்த நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஆடி வளைகாப்பு மற்றும் ஐப்பசி திருகல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18ம் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது. 15 தினங்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விழா நாட்களில் தினமும் காலை, மாலை காந்திமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. விழாவில் காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் இதனைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 3 தினங்கள் அம்பாளுக்கு ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. விழாவில் நிறைவு நாளான இன்று சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் ஏழுந்தருள குடைவரை வாயில் தீபாராதனைகளுடன் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடைபெற்றது. பின்னா் சுவாமி திருக்கோயிலுக்கு வந்த அம்மை அப்பரை வாணவேடிக்கைகளுடன் வரவேற்று திருக்கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா்.தொடா்ந்து கொடிமரம் அருகில் சுவாமி அம்பாளுக்கு நலுங்கு மாியாதை செய்யப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

பக்தா்கள் கொண்டுவந்த சீா்வாிசை பட்சணங்கள் சுவாமி முன் வைத்து நைவேத்யம் செய்யப்பட்டது. அா்ச்சனை முடிந்ததும் வேதம் புராணம் பஞ்சபுராணம் பாடி மங்கல வாத்யம் இசைக்க சுவாமி அம்பாளுக்கு நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பின்னா் சுவாமி அம்பாள் தோளுக்கிணியானில் அம்பாள் தன் புகுந்த வீட்டிற்கு முன்செல்ல சுவாமி பின்தொடா்ந்து எதாஷ்டானம் செல்வா். வந்திருந்த பக்தா்களுக்கு கல்யாண சீா்வாிசை பட்சணங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா