தரங்கம்பாடியில் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு
தரங்கம்பாடியில் கடற்கரை கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்யும்போது மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட பொறையாறு ரோட்டரி கிளப் தலைவரும் ஜோதிடருமான அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் பழமை மிக்க மாசிலாமணி நாதர் கோவில் அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை தோறும் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு பூஜை முடியும் நேரத்தில் தரங்கம்பாடியை சேர்ந்த பொறையார் ரோட்டரி சங்கத் தலைவரும், ஜோதிடருமான அருண்குமார்.
கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். கடற்கரையில் தெற்கு பார்த்த நிலையில் வீட்டிற்கும் தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது மேலே இருந்து எரிபொருட்களை ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அருணை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் கொண்டு சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். எழுவது சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக பொறையார் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோயிலில் தீ வைத்து ஒருவர் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.