அருப்புக்கோட்டை – பாளையம்பட்டி ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் கொடியேற்றம்
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் பிரசித்தி பெற்ற செங்கமலத்தாயார் சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் வைகாசி வசந்த விழா கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரஸ்தி பெற்ற அருள்மிகு செங்கமலத் தாயார் சமேத ஸ்ரீ வேணுகோபாலசாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசி வசந்த விழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று ஸ்ரீ வேணுகோபாலசாமி திருக்கோவிலில் வைகாசி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மங்கல இசை உடன் ஊர்வலமாக கொடி எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கும், பலிபீடத்திற்கும், மஞ்சள், தயிர், பால், இளநீர், திருமஞ்சனம், தேன், பழக்கலவைகள் என்ன 11 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கலசங்களில் பூஜித்து வைக்கப்பட்ட புனித நீர் கொடி மரத்தில் ஊற்றப்பட்டு தீப தூப ஆராதனை நடைபெற்றது. மேலும் உற்சவருக்கும் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த வைகாசி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.