in

விஷாலுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் சண்டை முற்றிய நிலையில்… ஆடிட்டரை நியமித்த நீதிமன்றம்

விஷாலுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் சண்டை முற்றிய நிலையில்… ஆடிட்டரை நியமித்த நீதிமன்றம்

விஷாலுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே உள்ள பிரச்சனையை முடிக்க உயர் நீதிமன்றம் ஆடிட்டர் ஸ்ரீ கிருஷ்ணாவை நியமித்துள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்திற்காக தயாரிப்பாளர் அன்பு செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் கடனை லைக்கா நிறுவனம் விஷால் சார்பாக அடைத்தது.

அந்த தொகையை விஷால் இன்னும் திருப்பி தராததால் லைக்கா விஷால் மீது நீதிமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் 15 கோடியை விஷால் அக்கவுண்டில் டெபாசிட் செய்யவும் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

அவ்வழக்கின் விசாரணையின் போது விஷால் அவர்கள் எங்கள் இருவருக்கும் இடையில் நடந்த பண பரிவர்த்தனையை ஆய்வு செய்ய ஆடிட்டர் ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள் ஆடிட்டர் ஸ்ரீ கிருஷ்ணா என்பவரை நியமித்து இரு தரப்பினரின் மூன்று வருடத்திற்கான வருமான வரி கணக்குகளை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆடிட்டர் கிருஷ்ணாவிடம் தக்கபடி ஆய்வு செய்து விரைவில் அறிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று இவ்வழக்கை மார்ச் நாலாம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

What do you think?

ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் நடிப்பு…. இரண்டையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனியா பாலகிருஷ்ணனை