in

திருத்துறைப்பூண்டி அருகே சுடுகாடுக்கு செல்ல சாலை இல்லாததால் சேற்றில் இறங்கி இறந்தவர்களை தூக்கி செல்லும் அவல நிலை

திருத்துறைப்பூண்டி அருகே சுடுகாடுக்கு செல்ல சாலை இல்லாததால் சேற்றில் இறங்கி இறந்தவர்களை தூக்கி செல்லும் அவல நிலை. சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூர் வாண்டையார் தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அந்தப் பகுதியில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய சாலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையானது சுடுகாடு வரை போடாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் மனுக்கள் கொடுத்தும் இதுவரையிலும் இந்த சாலை போடப்படாததால் இப்பகுதியில் இறந்தவர்களை எடுத்துச் செல்லும்போது முழங்கால் அளவு சேற்றில் நடந்து தூக்கி செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இன்று இப்பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிர் இழந்தார். அவரது உடலை இறுதி கடங்கிற்காக மிகவும் சிரமப்பட்டு சேற்றில் நடந்து தூக்கி சென்றனர். இதேபோன்று இறந்தவர்களை பல ஆண்டுகளாக சேற்றில் நடந்து சென்று தூக்கி செல்லும் அவல நிலை தொடர்ந்து வருவதாக இப்பகுதி மக்கள் வேதனை
தெரிவிக்கின்றனர்.

உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து கவனம் செலுத்தி சுடுகாடு வரை சாலை அமைத்து தர வேண்டும்மயான கொட்டகை மேற்கூரையை அனைத்தும் சேதமடைந்து உள்ளது இதனையும் சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ