in

தமிழர்களின் பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி நெல்லை சாகுபடி செய்து அசத்தி வரும் இயற்கை விவசாயி

தமிழர்களின் பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி நெல்லை சாகுபடி செய்து அசத்தி வரும் இயற்கை விவசாயி

 

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த கிழாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இயற்கை விவசாயியான இவர் தனது 10 ஏக்கர் நிலத்தில் சோதனை முயற்சியில் பல்வேறு நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.

கடந்த குருவை சாகுபடியில் வட மாநிலங்களில் விளையும் பாஸ்மதி அரிசி சாகுபடி செய்து ஏக்கருக்கு இரண்டு லட்ச ரூபாய் வருமானம் ஈட்டிய நிலையில், தற்போது தமிழர்களின் பாரம்பரிய நெல்லான, மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் ரகங்களை பயிரிட்டுள்ளார்.

தற்போது அவற்றை பராமரித்து வளர்த்து வரும் இவர், இந்த கருப்பு கவுனி நெல் சந்தையில் நல்ல விலைக்கு விற்கப்படுவதாகவும் கிலோ 230 ரூபாய்க்கு விற்பனையாகின்றது என்றும், இந்த நெல்லை உட்கொண்டால் சர்க்கரை நோய் குறையும் என்பதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், இதற்காக பூச்சி மருந்துகள் ரசாயன பள்ளிகள் பயன்படுத்தாமல் இயற்கை சார்ந்த உரங்களை அளித்து சாகுபடி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

முசிறியில் எம் ஐ டி கல்வியின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை

மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நியாய விலை கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்