in ,

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோவிலில் ஆஷாட ஏகாதசி சிறப்பு பூஜை

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோவிலில் ஆஷாட ஏகாதசி திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் பக்தர்கள் உற்சவமூர்த்தி திருவடிகளை தொட்டு வணங்கும் வைபவம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோவிலில் ஆஷாட ஏகாதசி திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகளும் பக்தர்கள் திருவடிகளை தொட்டு வணங்கும் வைபவம் நடைபெற்றது

முன்னதாக மூலவர் ரகுமாயி பாண்டுரங்கன் சுவாமிகளுக்கு புதுப்பட்டு வஸ்திரம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து உற்சவ மூர்த்திகளை சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர் முன்னதாக மங்கள விநாயகருக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனைகள் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன உற்சவ தெய்வங்களுக்கு துளசியால் அர்ச்சனைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க ஏழு முக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதனைத் அடுத்து ஏராளமான பக்தர்கள் ரகு மாயி பாண்டுரங்கன் உற்சவமூர்த்தி தெய்வங்களின் திருவடிகளை தொட்டு வணங்கி வழிபாடு செய்தனர் நிறைவாக பஜனை பாடல்கள் பாடி பக்தர்களுக்கு ஜடாரி தீர்த்த பிரசாரம் வழங்கப்பட்டது.

What do you think?

உலக நலன் வேண்டி நாமக்கல் பரமத்தி அருகே பீமேஸ்வரர்சிவ ஆலயத்தில் ருத்ர ஹோமம்

புதுச்சேரி மங்களம் தொகுதியில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் 100 நாள் வேலை திட்ட பணியை தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.