காரட்டை கிராமம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் காரட் கிராமத்தில் எழுந்து அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் நூதன ஆலய மற்றும் பரிவார மூர்த்திகள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை இரண்டாம் கால பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கோபூஜை கோ தரிசனம்,ரக்ஷாபந்தனம் , நாடி சந்தானம், மற்றும் 108 வகையான மூலிகை ஹோமங்கள், வீரமாகாளியம்மனுக்கு ஜெப ஓமங்கள், ஆகியவை நடைபெற்றன.தொடர்ந்து மங்கல மகா பூர்ணா ஆதி, யாத்ராதனம் ஆகியவே நடைபெற்றது. காலை 8.30மணியளவில் கடகம் புறப்பாடு தொடங்கி ஸ்ரீ வீரமா காளியம்மன் கருவறை விமானத்தை வந்தடைந்தது. காலை 8:45 மணி அளவில் பஞ்சமி திதி சுவாதி நட்சத்திரத்தில் விமான கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தொடர்ந்து மூலமா ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சரவணன் அடிகளார் மற்றும் முன்னுர் சிவஸ்ரீ சரவண குருக்கள் செய்து இருந்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.