in ,

ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேக விழா


Watch – YouTube Click

ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேக விழா

 

கரூர் மணவாடி நல்லி செல்லி பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேக விழா இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணவாடி, நல்லி செல்லி பாளையத்தில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அதன் தொடர்ச்சியாக அன்று முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னர் ஆலய அருகே சிவாசாரியார்கள் பிரத்தேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர். முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாகவேள்வி என இரண்டு கால யாக வேள்வி நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக யாக சாலையில் வைக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்திற்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக மேள தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்துவாறு தீர்த்த கலச குடத்தை கோபுரம் கொண்டு வந்தனர்.

அதைத் தொடர்ந்து மேளதாளங்கள், வான வேடிக்கை முழங்க கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

அதன் பின்னர் விநாயகர் மற்றும் மூலவர் பகவதி அம்மனுக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு தொடர்ச்சியாக பிரசாதம் வழங்கப்பட்டது.

கரூர் மணவாடி நல்லி செல்லி பாளையத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

75 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற உலக சாதனை

சிவகாசியில் வெறி செயல்