in

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உரையுடன் 31ஆம் தேதி சட்டசபையில் கூடுகிறது சபாநாயகர் செல்வம் பேட்டி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உரையுடன் 31ஆம் தேதி சட்டசபையில் கூடுகிறது சபாநாயகர் செல்வம் பேட்டி

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உரையுடன் 31ஆம் தேதி சட்டசபையில் கூடுகிறது. ஆகஸ்ட் 2ந் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்..

காகிதம் இல்லாத சட்டபேரவைக்கு மத்திய அரசு 8.16 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த பட்ஜெட்டை காகிதமில்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்ய முயற்சிகளை எடுத்து வருகிறோம். சபாநாயகர் செல்வம் பேட்டி…

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுவை அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதன்படி வரும் 31ந் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

அன்றைய தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் முழு பட்ஜெட் தாக்கல் செயய்கிறார் என தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரி பட்ஜெட்கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்றார்..

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் சட்டமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் கோப்பு துணைநிலை ஆளுநரிடம் உள்ளது. அவர் ஆய்வு செய்து விட்டு விரைவில் அனுமதி அளிப்பார் என கூறிய சபாநாயகர், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில அதிகாரிகள் முழுமையாக செலவிடவில்லை.

மத்திய ஜல்சக்தி திட்டத்தில் 33 கோடி வாங்கியதில் 1 கோடி மட்டுமே செலவிட்டு மீதி தொகையான 32 கோடியை திரும்ப அனுப்பி விட்டனர் என குற்றச்சாட்டினார். காகிதம் இல்லாத சட்டபேரவைக்கு மத்திய அரசு 8.16 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த பட்ஜெட்டை காகிதமில்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்ய முயற்சிகளை எடுத்து வருவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

What do you think?

பசி என்று தவித்த பூனை குட்டிக்கு பால் கொடுத்து பசி ஆற்றிய நாய்

மதுரையில் தேமுதிக சார்பாக மின்சார கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்