ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில்… ஒரே இருக்கையில் நயன்தாராவும் தனுஷும்
நயன்தாரா சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரங்கமான கடிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார், தனுஷ் தனது பியோண்ட் தி ஃபேரிடேல் என்ற ஆவணப்படத்தில் மூன்று வினாடிகள் திரைக்குப் பின்னால் இருக்கும் வீடியோவைப் பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். படத்தின் சில பகுதிகளைப் பயன்படுத்த தடையில்லாச் சான்றிதழை (NOC) பெறுவதற்காக இரண்டு வருடங்களுக்கும் மேலாக தனுஷை அணுகிய போதும் அவர் மறுத்ததாக நயன் தெரிவித்தார்.
கடந்த சில தினங்கலாக நயன்தாராவின் ஆவணபடம் குறித்த செய்திகள் பற்றி எரியும் நிலையில் ஒரு சில நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவாக பேசினர் இவர்கள் எல்லோருமே தனுஷின் படத்தில் நடித்தவர்கள் ஆனால் நயன்தாரா..வுக்கு ஏன் சப்போர்ட் செய்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. வியாழக்கிழமை இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் சென்னையில் நடைபெற்றது
இவர்களின் திருமணத்திற்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைத்துறையினர் வருகை தந்த நிலையில் நயன்தாராவும் தனுஷும் கலந்து கொண்டனர், முன் வரிசையில் அமர்ந்திருந்தும் இருவரும் ஒருவரையொருவர் தவிர்த்தனர். நெட்டிசன்கள் படையப்பா ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் காட்சியை நினைவுபடுத்துவதாக ட்ரோல் செய்து கலாய்கின்றனர்.