சட்ட விரோதமாக ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து சிவகாசி ரயில் நிலையத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் இரும்பு பாதை போலீசார் ரயில் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.
பின்னர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது எனவும் பட்டாசுகளை ரயில்களில் கொண்டு செல்வது சட்டப்படியான குற்றம் என போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதாக ரயில்வே போலீசாருக்கு வந்த தகவலின் பெயரில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் இருப்புப் பாதை போலீசார் ரயில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சிவகாசி ரயில் நிலையத்தில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சமாதானம், தலைமைக் காவலர் முருகேசன் ஆகியோர் ரயில் பயணிகளிடம் சட்டவிரோதமாக ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வது குற்றம் எனவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதன் பின்னர் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.