திருச்செம்பள்ளி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சமையல் கலைஞர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் திருச்செம்பள்ளி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது
முன்னதாக செம்பனார்கோவில் சமையல் கலைஞர்கள் சார்பில் பரசலூர் பிரசித்தி பெற்ற செல்லப்பர் ஆலயத்தில் இருந்து ஏராளமானவர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர் மேள வாக்கியங்கள் முழங்க காளி ஆட்டத்துடன் கரகத்துடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும் நடைபெற்றது வழி நெடுகிலும் தீபம் காட்டப்பட்டது பலர் பக்தி பரவசத்துடன் சாமி வந்து ஆடினர் பின்னர் சமையல் கலைஞர்கள் சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும், கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது