in

இப்தார் விழாவில் 500 பேருக்கு தலைவாழை இலை போட்டு அறுசுவை விருந்து


Watch – YouTube Click

இப்தார் விழாவில் 500 பேருக்கு தலைவாழை இலை போட்டு அறுசுவை விருந்து

 

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றானது ரமலான் மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய நோன்பு ஆகும். 30 நாட்கள் கடும் விரதம் இருந்து இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவர்.

இந்த நிலையில் தினம் தோறும் இப்தார் விழா நடைபெற்று வருகிறது அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திட்டச்சேரி முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து திட்டச்சேரியில் உள்ள இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கி இன்று மத நல்லிணக்க இப்தார் விழா நடைபெற்றது.

இதில் ஜாதி மத பேதமின்றி கலந்து கொண்ட அனைவருக்கும் தலைவாழை இலை போட்டு நோன்பு கஞ்சி, சுட சுட அல்வா, ரவா தோசை, பொடி இட்லி, பொடி தோசை, மசாலா தோசை, இளநீர் ஜூஸ், வெஜிடபிள் ரோல், இடியாப்பம் உள்ளிட்ட அறுசுவை விருந்தளிக்கப்பட்டது.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் விழா அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Watch – YouTube Click

What do you think?

திமுக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது வைகைச்செல்வன் பேச்சு

உறுதியானது விவாகரத்து…. நடிகர் தனுஷ்… ஐஸ்வர்யா நிரந்தர பிரிவு…கவலையில் ரஜினிகாந்த்