in

பழனி அருகே மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் வழிபாடு

பழனி அருகே மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் வழிபாடு

 

பழனி அருகே பெரியகலையம்புத்தூர் கிராமத்தில் மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

பழனி அருகே உள்ள பெரியகலையம்புத்தூர் கிராமத்தில் பழமையான மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் குறும்பர் சமுதாய மக்கள் சார்பில் கோயிலில் விழா கொண்டாபடுகிறது.

சண்முகநதியில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் ஆண்,பெண் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

கோயில் பூசாரி ஆவேசமாக வந்து பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து சிதறவிடுவதை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

விழாவில் நெய்க்காரபட்டி, பாப்பாப்பம்பட்டி, குப்பம்பாளையம், வாடிப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.

What do you think?

அய்யலூர் அருகே விலங்கு கருப்பணசாமி கோயிலில் 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு 

வேதாரண்யம் அருகே அண்ணாப்பேட்டை குருந்தடி மாரியம்மன் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை