திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் விடுமுறை தினமான இன்று 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.
தொடர் விடுமுறை வருவதால் அண்ணாமலையார் ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு விநாயகர் முருகர் சுவாமி அம்மன் சண்டிகேசுவரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபா ஆராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் ராஜகோபுரத்தில் இருந்து கருவறை வரை சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.
சமீபகாலமாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, அயல்நாடுகளில் இருந்து அண்ணாமலையார் ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்ணாமலையார் ஆலயத்தில் தொடர்ந்து 4 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள்.
அண்ணாமலையார் ஆலயத்தின் சார்பாக பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாமி பார்த்துவிட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு அண்ணாமலையார் ஆலயத்தின் சார்பாக இன்று லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.