திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் சிவனடியார்கள் நந்தியாட்டம் ஆடி அண்ணாமலையாரை வழிபட்டார்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் விடுமுறை தினமான இன்று சாமி தரிசனம் செய்ய வந்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரர் சிவ கணங்கள் திருக்கைலாய வாதிய குழுவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சங்கு நாதம் எக்காலம் திருச்சின்னம் குட்டதாரை பிரம்ம தாளம்
கொம்புத்தாரை கோண தாரை ஒடல் வாத்தியம் முரசு என கயிலாய வாத்திய கருவிகளை கொண்டு சிவனடியார்கள் நந்தியாட்டம் ஆடி அண்ணாமலையாரை வழிபட்டார்கள். குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள்.
பிரகதீஸ்வரர் சிவகணங்கள் திருக்கைலாய வாத்திய குழுவை சேர்ந்த சிவனடியார்கள் பழமையான பாடல் பெற்ற சிவாலயங்களுக்கு சென்று திருக்கைலாய வாத்தியங்கள் இசைத்து சிவனை வணங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் ராஜகோபுரம் முன்பு கைலாய வாத்திய குழுவில் 5 வயது முதல் 60 வயது உள்ள சிவனடியார்கள் கைலாய வாத்தியங்கள் இசைத்து அண்ணாமலையாரை வழிபட்டுச் சென்றார்கள்