புவனகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவுத்துறை அலுவலக பணியாளருக்கு பணி பாதுகாப்பு வேண்டி ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவாளர் மீது ஒரு நபர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்த சம்பவத்தை கண்டித்தும் அதே போன்று மதுரை பேரையூர் உள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவாளர் மண்டையை உடைத்த சம்பவத்தை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் பத்திர பதிவுத்துறை அலுவலக பணியாளர்கள் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து பதிவுத்துறை அலுவலக பணியாளர்களுக்கு பணியில் பாதுகாப்பு வேண்டி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில் புவனகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் சஞ்சீவி சத்தியசீலன் தலைமையில் பதிவுத்துறை அலுவலர்கள் கையில் பதாகை ஏந்தி காலை 10 முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்