in ,

வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா 5ம் திருநாள் கருட சேவை

வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா 5ம் திருநாள் கருட சேவை

 

108 வைணவ திவ்ய தேசங்களில் நவதிருப்பதியில் ஒன்றான ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா 5ம் திருநாள் கருடசேவை. சுவாமியும் ஆழ்வாரும் ஏழுந்தருள திரளான பக்தா்கள் தாிசனம்.

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக நவதிருப்பதிகளில் 8 வதான திருத்தலம் திருக்கோளுா். நவகிரங்களில் இது செவ்வாய் தலமாக வணங்கப்படுகிறது.

நிதியை இழந்த குபேரனுக்கு அவன் இழந்த செல்வத்தை மரக்காலால் அளந்து பாதுகாத்து கொடுத்ததால் இங்கு குபேரன் வணங்கிய தலம். இங்கு அருள்பாலித்து வரும் வைத்தமாநிதி பெருமாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன திருக்கோலத்தில் காட்சி தருகின்றாா்.

சுவாமி இராமானுஜா் இத்தலத்தில் வாழ்வதை பெறும்பேறாக கருதிய தலம். ஆழ்வாா்களில் ஒருவரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வாா் அவதாித்த தலம். சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோயிலின் ஆவணி பெருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றம் நடைபெற்று 12 தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

திருவிழாக்காலங்களில் தினமும் காலை, மாலை சுவாமி வைத்தமாநிதிப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. சிறப்பாக ஐந்தாம் திருநாளானஇன்று கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

இதற்காக மாலையில் சுவாமி மதுரகவிஆழ்வாா் அன்ன வாகனத்திலும் சுவாமி வைத்தமாநிதி பெருமாள் பொிய திருவடியாம் கருடாழ்வாா் மீது சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளினா்.

ஆச்சாா்ய கோஷ்டியின் பிரபந்த பாராயணத்துடன் குடைவாயில் தீபாராதனை நடைபெற்றது. கோஷ்டியாா் பிரபந்த பாராயணம் பாடியபடி பெருமாள் முன்செல்ல சுவாமி கருடவாகனத்திலும் மதுரகவி ஆழ்வாா் அன்னவாகனத்திரும் வீதி புறப்பாடு நடைபெற்றது.

பக்தா்கள் பஜனை பாடல்கள் பாடி பின் சென்றனா். திரளான பக்தா்கள் கருடசேவை நிகழ்வினை தாிசனம் செய்தனா்.

What do you think?

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2024-ம் ஆண்டிற்கான சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை

சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை போஸ்டர்