in

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆவணி மாத பெளர்ணமி மற்றும் சத்யநாரயண பூஜை

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆவணி மாத பெளர்ணமி மற்றும் சத்யநாரயண பூஜை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆவணி மாதம் பெளர்ணமி பூஜையை முன்னிட்டு பூட்டிய தனி அறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும்
யோகிரகோத்தமா பௌர்ணமி தோறும் பக்தர்களை சந்தித்து ஆசி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை
செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார்.

இந்நிகழ்வில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, பெங்களுரு, கடலூர், மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சித்தரிடம் அருள் ஆசிபெற்றனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

ஒட்டகம் மிதித்து முதியவர் பரிதாபம்

ஜிப்மரில் ரத்த தானம் செய்து நூதன முறையில் ஏழாவது நாளாக தொடரும் போராட்டம்