in

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆவணித் தவசுக் காட்சி

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆவணித் தவசுக் காட்சி-ஒப்பனை அம்பாளுக்கு முகலிங்கநாதராக காட்சி-திரளான பக்தர்கள் பங்கேற்பு

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் அருள்மிகு பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணி தவசு காட்சி நடைபெற்றது இதில் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் அருள்மிகு ஒப்பனைஅம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணி தவசுத் திருவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் 14 நாட்கள் திருவிழாவாக நடைபெறும். இந்தான்டிற்கான திருவிழா கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆவணி தவசுக் காட்சி நடைபெற்றது விழாவினை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது தொடர்ந்து தெற்கு ரத வீதியில் உள்ள மண்டபத்தில் ஒப்பனை அம்பாள் தவக்கோளத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து தெற்கு ரத வீதியில் உள்ள தவசு பந்தலில் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஒப்பனை அம்பாளுக்கு முகலிங்கநாதராக காட்சி கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி பால்வண்ண நாதராக ஒப்பனை அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் சமேதராக சன்னதிக்கு எழுந்தருளினர்
ஆவணி தவசு காட்சியைக் காண சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர், சுப்புலாபுரம்,வயலி, பெரும்பத்தூர், பனையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் திரண்டனர்.

What do you think?

சங்கரன்கோவிலில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி கற்ப்பதன் அவசியம் குறித்து உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

முன்னாள் ராணுவ வீரரான தெய்வத்தை மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை