in ,

அவ்வையார் குப்பம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய 6-ஆம் ஆண்டு திருக்கல்யாணம்

அவ்வையார் குப்பம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய 6-ஆம் ஆண்டு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் அவ்வையார்குப்பம் கிராமம் அருள்மிகு பூரணி பொற்க்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய 6-ம் ஆண்டு திருக்கல்யாணத்தை முன்னிட்டு வண்ணமலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பூரணி பொற்க்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் மணமக்களாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

முன்னதாக தாம்பூலம் மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு பக்தர்களால் கொண்டுவரப்பட்டன. மேலும் விநாயகர் பூஜைவுடன் இனிதே தொடங்கியது. மேலும் திருக்கல்யாண நிகழ்வுகள் கால்நடும் வைபத்துடன் மற்றும் கலச பூஜை, காப்பு கட்டும் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ பூரணி பொற்கலை ஆகிய இரு தெய்வங்களுக்கு மங்கள நாண் அணிவிக்கும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை உடன் ஆரம்பிக்கப்பட்ட திருக்கல்யாணம் திருமாங்கல்யம் வைபவம் மற்றும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

What do you think?

வன்னிப்பேர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ சுடலை காளியம்மனுக்கு 9-ம் ஆண்டு ஆடி அமாவாசை

ஒலக்கூர் அருள் தரும் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஆடி மாத சிறப்பு ஏக தின லக்ஷார்ச்சனை பெருவிழா