தர்கா பகுதியில் அவார்ட் வழங்கும் நிகழ்ச்சி
நாகை மாவட்டம் நாகூர் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியர்களின் புனித தலமாக விளங்கிக் கொண்டிருக்கும் நாகூர் ஆண்டவர் தர்கா பகுதியில் இன்று அவார்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகூர் ஆண்டவரின் பேரப்பிள்ளை சூஃபி கலிபா சாஹுல் ஹமீது சாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்தியா மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், பர்மா, சவுத் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, துபாய், தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான இஸ்லாமிய பிள்ளைகள், அதிகமாக சலலாத் என்ற புகழ் பாடிய போட்டியில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் கலந்து கொண்டனர்.
இதில் அதிகமாக ஓதிய பிள்ளைகளுக்கு கேடயம் சான்றிதழ் தங்கப்பதக்கம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .
நாகூர் மையப்பகுதியில் நடந்த விழாவில், தர்கா மேனேஜிங் டிரஸ்டி காஜி ஹுசைன் சாஹிப், தர்கா truste ஷேக் ஹசன் சாகிப், அல்ஹாஜ் நவாஜ் சாஹிப், dr அன்சாரி, dr. Mubarak அலி, கீழக்கரை கல்வத் நாயகம் தைக்கா கலீஃபா S.M.S. முத்துவாப்பா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கினார்கள்.
முகமது பாக்கர் ஆலிம் சாகிப் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இன்நிகழ்ச்சியில் , 500க்கும் மேற்பட்ட பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.