பூச்சியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தென்னை சாகுபடிக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் சுருள் வெள்ளை ஈ பூச்சியை அழிப்பது குறித்து தஞ்சாவூர் தோட்டக்கலைத்துறை மற்றும் எம்.எஸ் சுவாமிநாதன் வேளாண் கல்லூரி சார்பில் தஞ்சை மாவட்டம் வடசேரியில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் தஞ்சை எம்.பி முரசொலி கலந்து கொண்டு பூச்சியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தென்னை விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் சுருள் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலால் தென்னையில் மகசூல் குறைகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிகப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு பூச்சி தாக்குதலை அளிக்கும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.
அதன்படி தஞ்சை மாவட்டம் வடசேரியில் தென்னை விவசாயிகளுக்கு சுருள் வெள்ளை ஈயை அளிக்கும் தொழில்நுட்பம் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
தஞ்சாவூர் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் வெங்கட்ராமன், மற்றும் மூத்த வேளாண் வல்லுனர்கள், ஈச்சங்கோட்டை எம்.எஸ் வேளாண் கல்லூரி பேராசிரியர்கள், விவசாயிகளுக்கு வெள்ளை ஈயையின் தீவிரத்தை விளக்கி அதனை அழிப்பது பற்றி விளக்கி கூறினர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கலந்து கொண்டு விவசாயிகளிடம் உரையாடினார். பின்னர் வெள்ளை ஈயை அழிக்கும் மருந்தை ஸ்ப்ரே மூலம் அடித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.