திருத்துறைப்பூண்டியில் தனியார் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று திருத்துறைப்பூண்டி காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மாணவர்களிடையே பேசுகையில்…
போதை பொருட்கள் பயன்படுத்தக்கூடாது போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் புகைப்படங்களின் தீமைகள் குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் மாணவர்களாகிய நீங்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் பள்ளி படிக்கும் மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று 18 வயது நிரம்பிய உடன் ஓட்டுநர் உரிமம் எடுத்த பிறகு இருசக்கர வாகன ஓட்ட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்
அனைவரும் கட்டாயம் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறுவதால் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்தும் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது சீட்டு பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என மாணவர்களாகிய நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்
இன்றைய இளைய சமுதாயத்தினர் குறிப்பாக மாணவ மாணவிகள் அதிக அளவில் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது எனவே கல்வி சம்பந்தமாக முக்கியமான விஷயங்களுக்காகவும் செல்போன் பயன்படுத்த வேண்டும் எனவும் மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் இணையவழி குற்றங்கள் குறித்தும் மேலும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என டி எஸ் பி .பாஸ்கரன் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.