in

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் கல்லூரி மாணவ மாணவிகள் பெண் காவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் மட்டும் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை கால்டாக்ஸ் பகுதியில் துவங்கி மணக்குடி வரை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த போட்டி நடைபெற்றது. போட்டியில் மகளிர் காவலர்கள் மற்றும் மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார்.

What do you think?

நீத்து சந்திரா பிரபல பாடகர் மீது கோர்ட்டில் வழக்கு தாக்கல்

மகளிர் தின சிறப்பு சலுகை ஒரு ரூபாய்க்கு அமுல் ஐஸ்கிரீம்