in

பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பதும் பாதுகாப்பதும் குறித்த விழிப்புணர்வு பேரணி

பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பதும் பாதுகாப்பதும் குறித்த விழிப்புணர்வு பேரணி

 

பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பதும் பாதுகாப்பதும் குறித்த நாகை முதல் வேதாரண்யம் வரை 50 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி பேரணியை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் புதிய விடியலை நோக்கி என்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் முருகேசன் தொடங்கி வைத்தார். நாகை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வேதாரண்யத்தில் நிறைவு பெற்றது.

நாகை, வேளாங்கண்ணி, வெள்ளப்பள்ளம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதி சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைகவசம் அணிந்து 50 கி.மீ விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். முன்னதாக மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிக்கவும் ஆண் குழந்தைகளின் பிறப்பு நிகராக உயர்த்திடவும் பெண் குழந்தைகளுக்கு காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் செயல்படுவதை நான் அறிவேன் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் செயல்பாட்டிற்கும் நடவடிக்கைகளுக்கும் நான் உறுதுணை புரிவேன் எனவும் கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை எக்காரணம் கொண்டு கண்டறியவோ, கருக்கலை செய்ய முயல மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

What do you think?

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நான்காம் நாள் கற்பக விருட்ச வாகன புறப்பாடு

நில அபகரிப்பு… நாகர்ஜுனா மீது வழக்கு பதிவு