சுடு களிமண் பொம்மைகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்
காலத்தால் மெல்ல மெல்ல அழிந்து வரும் சூடு களிமண் பொம்மைகள் குறித்து பயிற்சி முகாம் பத்மஸ்ரீ முனுசாமி மாணவ மாணவிகளுக்கு சூடு களிமண் பொம்மை செய்வது குறித்து பயிற்சி அளித்தார்.
நமது பாரம்பரிய கலையான டெரகோட்டா பொம்மைகள் செய்வது குறித்தும், காலத்தால் மெல்ல மெல்ல அழிந்து வரும் சுடு களிமண் பொம்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வகையில் பயிற்சி முகாம் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் (ஆர்க்கிடெக்) படிக்கும் மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அவர்கள் புதுச்சேரியில் புவிசார் குறியீடு பெற்ற சுடு களிமண்ணால் செய்யப்படும் டெரகோட்டா பொம்மைகள், மற்றும் காகித கூழ் கொண்டு தயாரிக்கப்படும் பொம்மைகள் குறித்து அறிந்து கொண்டனர்.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பத்மஸ்ரீ விருது பெற்ற கைவினை கலைஞர் முனுசாமி,டெரக்கோட்டா பொம்மைகள், மற்றும் காகித கூழ் பொம்மைகள் செய்வது குறித்தும் இவற்றின் பயன்பாடுகள் வடிவமைப்பு தன்மைகள் குறித்து பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் பறவைகள், விலங்குகள், சுவாமி சிலை, உள்ளிட்ட உயிரினங்களை மாணவர்களும் பொம்மைகளாக செய்து கற்றுக் கொண்டனர்.
இது குறித்து பத்மஸ்ரீ முனுசாமி கூறும்போது…
டெரகோட்டா பொம்மைகள் செய்வது மெல்ல மெல்ல அழிந்து வருவதால் மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்றால் அடுத்த தலைமுறைக்கும் பொம்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் அதற்காகவே மாணவர்கள் மாதந்தோறும் கல்வி சுற்றலாவாக புதுச்சேரிக்கு வருகை புரிந்து பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சி எடுத்து செல்கின்றனர் இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
மாணவிகள் கூறும் போது….
புவிசார் குறியீடு பெற்ற டெரகோட்டா மற்றும் காகித கூழ் பொம்மைகளை தெரிந்து கொள்ள புதுச்சேரிக்கு வந்து பார்க்கவும், இந்த கல்வி சுற்றுலா மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.